பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசாரங்களை தொலை காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு தடை விதிக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தி உள்ளது.

இது பற்றி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தபின், பாஜக தலைவரும், நாடாளுமன்ற விவகார இணை அமைச்சருமான முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது: மக்களுக்கு அளிக்கப்படும் தேர்தல் வாக்குறுதிகளை பீகார்மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது எல்லா கட்சிகளுக்கும் இருக்கும் அடிப்படை உரிமை.

எனவே, பிரதமர் மோடியின் பிரசாரங்களை தொலை காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு தடைவிதிக்க மாட்டோம் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:

Leave a Reply