குஜராத்தில் 2002ம் ஆண்டு நிகழ்ந்த மத வன்முறையில் அம்மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும் பா.ஜ.க. தேசியத் தலைவருமான அமித்ஷாவுக்கு உள்ள தொடர்புகுறித்து விசாரிக்க கோரி மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் தாக்கல்செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கர சேவகர்கள் சென்ற ரயில் குஜராத்தின் கோத்ரா என்ற இடத்தில் எரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குஜராத்தில் மதவன்முறை வெடித்தது. ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.

இந்த படுகொலைகளின் போது இந்துக்கள் தங்களது கோபத்தை தீர்த்துக்கொள்ள போலீசார் அனுமதிக்க வேண்டும் என்று முதல்வராக இருந்த நரேந்திரமோடி தங்களுக்கு உத்தரவிட்டதாகவும் ; 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி நரேந்திர மோடி வீட்டில் நடந்த கூட்டத்தில் நானும் கலந்து கொண்டதாகவும் .பொய் புகார்களை கூறினார் அம்மாநில ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்.

இவர் பொய்யான தகவல்களை கூறுகிறார் என்பதை குஜராத் காவல்துறை தலைவர் உறுதியும் செய்தார் . நரேந்திர மோடி வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொள்ளவே இல்லை எனவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக சாட்சி கூறும்படி கே.டி. பந்த் என்ற தமது ஓட்டுநரை சஞ்சீவ்பட் அடித்து துன்புறுத்தியதாகவும் ஒருசர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சஞ்சீவ் பட் மீது வழக்கும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தம்மீதான ஓட்டுநரை தாக்கிய வழக்கு மற்றும் குஜராத்கூடுதல் அட்வகேட் ஜெனரலின் இமெயிலை ஹேக்செய்த வழக்கு ஆகியவை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கவேண்டும் என்றும் கோத்ரா ரயில் எரிப்புக்கு பின்னர் நடந்த வன்முறைகள் தொடர்பாக குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சரும் பாஜக. தலைவருமான அமித்ஷாவையும் விசாரிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் சஞ்சீவ் பட் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இம்மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது. தலைமை நீத்பதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச்முன்பு இம்மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது சஞ்சீவ்பட் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடிசெய்த உச்ச நீதிமன்றம், விசாரணை நீதிமன்றம் இவ்வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

Leave a Reply