சவுதியில் பன்றி இறைச்சியை கேட்டுசாப்பிட முடியுமா?” என்று எழுத்தாளர்களிடம் விஸ்வ இந்துபரிஷத் மூத்த தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

எழுத்தாளர் கல்புர்கி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் சாகித்ய அகாடமி மவுனம் சாதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சில எழுத்தாளர்கள் தங்களது சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பி அளித்தனர்.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் விஸ்வ இந்துபரிஷத்தின் (விஎச்பி) 2 நாள் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த விஎச்பி தேசிய செய்தித் தொடர்பாளர் சுரேந்திர ஜெயின் கூறியதாவது:

விருதுகளை திருப்பி தரும் எழுத்தாளர்களை ஒன்று கேட் கிறேன். நீங்கள் சவுதி அரேபியாவுக்கு சென்றால் பன்றி இறைச்சிகேட்டு சாப்பிட முடியுமா, அப்படி கேட்டு உயிருடன் திரும்பிவந்தால், நானே உங்களை வரவேற் பேன். நாங்கள் கேட்பதெல்லாம், இந்தியாவில் மாட்டிறைச்சி உண்பதற்கு முழுதடை விதிக்க வேண்டும் என்பதுதான். ஏனெனில், பசுக் களை தெய்வமாக வணங்குபவர் கள் இந்துக்கள்.

இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அசைவ உணவு உண்ப வர்கள் என்பதை நாங்களும் அறிவோம். அவர்களுடைய உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்பது உள்நோக்கம் அல்ல. ஆனால், பசுக்களை கொல் வதற்கு தடை வேண்டும். அவற்றை தாயாய் தெய்வமாய் இந்துக்கள் மதிக்கின்றனர். அது இந்துக்களின் மத உணர்வுகளோடு நம்பிக்கை யோடு தொடர்புடையது. பசுக் களை வதைக்க கூடாது.

மற்ற மதத்தவர்களின் உணர்வு களை எப்போதும் மதிப்பவர்கள் இந்துக்கள். அதேபோல் இந்துக்களின் மத உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

தாத்ரி சம்பவத்தில் ஐ.நா. சபை தலையிட கோரி உத்தரப் பிரதேச அமைச்சர் ஆசம்கான் கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது. அது அவருடைய முட்டாள் தனமான செயல்.

இதுபோன்ற அமைச்சரை முதல்வர் அகிலேஷ் யாதவ் உடனடியாக பதவி நீக்கவேண்டும். ஆசம் கான் மீது தேச துரோக வழக்குப் பதிவுசெய்ய வேண்டும். அப்போதுதான் சமாஜ்வாடி அரசு மீது இந்துக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

உத்தரப் பிரதேசத்தில் மேலும் பலஇடங்களில் பசுவதை நடப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இது இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் நேரடித் தாக்குதல். உத்தரப் பிரதேச மாநிலம் இப்போது கலவர பூமியாக மாறி வருகிறது.

இவ்வாறு சுரேந்திர ஜெயின் கூறினார்.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.