உத்தரப் பிரதேச மாநிலம், தாத்ரியில் மாட்டி றைச்சி சாப்பிட்டதாக முதியவர் ஒருவர் அடித்துக் கொல்லபட்ட சம்பவத்தை முன்னிறுத்தி, மக்களை பிளவு படுத்தும் அரசியலில் எதிர்க்கட்சிகள் தான் ஈடுபடுகின்றன என் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.


மேற்குவங்க மாநிலத்தில் இருந்து வெளிவரும் “ஆனந்தபஜார்’ எனும் நாளிதழுக்கு இது தொடர்பாக முதல் முறையாக அவர் அளித்த பேட்டியில் தெரிவிக்கபட்டிருப்பதாவது:

தாத்ரி சம்பவமும், பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் இசைநிகழ்ச்சி மும்பையில் நடை பெறவிடாமல் தடுக்கப்பட்டதும் துரதிருஷ்டவச மானதாகும். ஆனால், இந்த சம்பவங்களுக்கும் மத்திய அரசுக்கும் என்ன தொடர்புள்ளது? இது போன்ற சம்பவங்களை பாஜக ஒருபோதும் ஆதரிக்காது.

இது போன்ற சம்பவங்களில் பாஜகவுக்கு எதிராக மதவாத புகார்களை எழுப்பும் எதிர்க் கட்சிகள், இதன் மூலம் மக்களைப் பிளவு படுத்தும் அரசியலில் ஈடுபடுகின்றன. கடந்த காலங்களில் மதச் சார்பின்மை குறித்து விவாதம் நடைபெற்று வந்தது. தற்போது, அதற்கு மீண்டும் இடமளிக்கப் பட்டுள்ளது. போலி மதச்சார்பின்மைக்கு பாஜக எப்போதுமே எதிரானதாகும்.

ஆனால், சிறுபான்மை யினரின் வளர்ச்சிக்காக அல்லாமல், அவர்களை வாக்கு வங்கியாக கருதி இது போன்ற பிரசாரத்தை எதிர்க் கட்சிகள் செய்துவருகின்றன. பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரை யாடல்கள் மூலம் இந்த விவாதத்துக்கு தீர்வுகாண முடியும் என்று அந்தப் பேட்டியில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply