இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும்வகையில் அப்துல் கலாமின் நினைவிடம் அமைக்கப் படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் 84வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் அவரது வெண்கலசிலையை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.


இதனையடுத்து டி.ஆர்.ஓ.,வில் அறிவியல் கண் காட்சியை தொடங்கிவைத்து பார்வையிட்டார். பின்னர் அப்துல்கலாம் அவர்களை பற்றிய தனது நினைவுகளை கூட்டத்தினரிடையே நினைவு கூர்ந்தார்.

அப்போது பேசிய மோடி. கலாமின் வாழ்க்கை இளைய தலை முறையினருக்கு வழிகாட்டியாக இருக்கும். சொந்தஊரில் கலாம் அவர்களுக்கு நினைவிடம் கட்ட நிலம் கையெழுக்கப்
படுத்தப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும்வகையில் அப்துல் கலாமின் நினைவிடம் அமைக்கப்படும். அனைவருக்கும் உத்வேகம் அளிப்பவராக கலாம் திகழ்ந்தார். அவரதுகனவை நினைவாக்குவது தேசத்தின் கடமை என்றார்.

Leave a Reply