நாடுமுழுவதிலும் உள்ள 101 ஆறுகளை நீர்வழிப் பாதையாக மாற்றுவதற்கான மசோதா, பார்லி., மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என, மத்திய சாலை போக்கு வரத்து, கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், கப்பல் போக்குவரத்துக்கு ஒரு கிமீ., பயணத்துக்கு 30 பைசா மட்டுமே செலவு எனவும், இதுவே ரயில் போக்கு வரத்துக்கு 1 ரூபாயும், சாலைப்போக்குவரத்துக்கு 1 ரூபாய் 50 பைசா செலவு எனவும், 14,500 கி.மீ., தொலைவுக்கு நீர்வழி போக்குவரத்தை துவங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply