இந்தியாவில் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதற்காக, இங்குள்ளவர்களுக்கு வால்மார்ட் நிறுவனம் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்த விவகாரம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ், கூறியதாவது:

உலகின் மிகப் பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான, அமெரிக்காவின் “வால்மார்ட் நிறுவனம்’, இந்தியாவில் கால்பதிப்பதற்கு கடந்த 2007-12ஆம் ஆண்டுகளில், இங்குள்ளவர்களுக்கு ரூ.125 கோடி வரை லஞ்சமாக கொடுத்துள்ளது.

இந்த லஞ்சப்பணம், சில்லறை வர்த்தகத்தில் அன்னியநேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்டம் இயற்றுவதில் முக்கிய பங்காற்றியுள்ளது.

உள்ளூர் சில்லறை விற்பனை யாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என கவலைதெரிவித்து, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதியபிறகு, வால்-மார்ட்டை அனுமதிப்பது என காங்கிரஸ்கட்சி தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டதற்கு இதுவே காரணமாகும். எனவே, அந்த லஞ்சப்பணம் காங்கிரஸ் தலைவர்களுக்கும் கொடுக்கப்பட்டதா? என கேள்வியெழுந்துள்ளது.

ராஜீவ்காந்தி காலம் முதல் ராகுல்காந்தி காலம்வரை, சர்வதேச அளவில் காங்கிரஸ் கட்சி முறைகேடுகளில் ஈடுபட்டதை வெளி நாட்டு ஊடகங்கள் அம்பலப்படுத்தி வருகின்றன.

உலகரங்கில் இந்தியா ஒளிரவேண்டும் என்பதற்காக, பிரதமர் நரேந்திரமோடி அயராது பாடுபட்டு வரும் வேளையில், சர்வதேசளவில் காங்கிரஸ் தொடர்ந்து நாட்டுக்கு அவமானத்தை தேடித்தருகிறது என்றார் அவர்.

Tags:

Leave a Reply