பாராளுமன்ற குளிர் காலத் தொடர் கூடும்தேதியை மத்திய மந்திரி சபை இன்று முடிவு செய்கிறது.  பாராளுமன்ற விவகாரங் களுக்கான மத்திய மந்திரி சபைக் கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை கூடுகிறது. பாராளுமன்ற விவகாரத் துறை மந்திரி வெங்கையா நாயுடு தலைமையில் அவருடைய அலுவலகத்தில் கூட்டம் நடக்கிறது.

இதில் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், நிதி மந்திரி அருண் ஜெட்லி, வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், சட்ட மந்திரி சதானந்த கவுடா, ரசாயனம் மற்றும் உரத் துறை மந்திரி ஆனந்த்குமார், நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி ராம்விலாஸ் பாஸ்வான், சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி முடிவு செய்யப்படுகிறது.
உத்தர பிரதேசம் தாத்ரி சம்பவம், மாட்டிறைச்சி மீதான தடை, பாஜக. எம்.பி.க்களின் சர்ச்சைக் குரிய கருத்துக்கள், சாகித்ய அகாடமி விருதை எழுத்தாளர்கள் திருப்பிஅளித்தது ஆகியவை குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் கடும் விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது.

நடப்பு ஆண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 3–வது வாரத்தில் தொடங்கி, டிசம்பர் 24–ந்தேதி வரை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் குளிர்கால கூட்டத்தொடர் ஒருமாதம் காலம் நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:

Leave a Reply