கருத்துக்களை தெரிவிக்கும் வழியாக வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று மத்திய நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அருண்ஜெட்லி தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆடுவதற்கு முயற்சி மேற் கொள்ளபடுகிறது. இந்தமுயற்சியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே மேற்கொண்டு வருகிறது. வருகிற டிசம்பர் மாதம் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே கிரிக் கெட் தொடரை நடத்தவேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட்வாரிய தலைவர் சகார்யார்கான் இந்தியாவிற்கு வந்துள்ளார்.

அவர் மும்பையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சசாங்க் மனோகரை சந்தித்து பேச திட்டமிட்டு இருந்த போது அந்த கூட்டம் நடக்காமல் இருப்பதற்கு சிவசேனை கட்சியினர் இந்திய கிரிக்கெட் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் இருநாடுகளின் கிரிக்கெட் வாரிய தலைவர்களின் சந்திப்பு நடக்காமல் கைவிடபட்டது. இந்தவன்முறை குறித்து மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று கூறியதாவது, மும்பையில் கிரிக்கெட் வாரியத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபடுவதும் சுதீந்திர குல் கர்னி மீது கறுப்பு மையை ஊற்றுவதும் சரியான நடைமுறை இல்லை.

எதிர்ப் புகளை தெரிவிப்பவர்கள் வன்முறை மூலமாக அதனை வெளிப்படுத்தக் கூடாது.சில தலைவர்கள் மிகவும் பதட்டமான விஷயங்களில் முரண்பட்ட கருத்துக்களை கூறி இருக்கிறார்கள். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். சிலர் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த வன் முறையில் ஈடுபடுகிறார்கள். இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இதுபோன்று நடக்க சாத்தியமாக உள்ளது. நமக்கு என்று ஒருநாகரீகம் இருக்கிறது. நமது கருத்துக்களை சொல்வதற்கு பலவழிகள் இருக்கின்றன. அதனை விட்டுவிட்டு வன்முறையில் ஈடுபடுவது சரியல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:

Leave a Reply