இந்துமுன்னணி நிர்வாகிகளை காவல்துறையினர் கைவிலங்கிட்டு அழைத்து சென்றதற்கு மாநிலத் தலைவர் டாக்டர் அரசுராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பணி புரியும் போலீஸாரின் பாதுகாப்பு நலன்கருதி, இந்து முன்னணி சார்பில் குடும்ப நல பாதுகாப்புசங்கம் தொடங்கப்பட உள்ளது எனக்கூறி, மாவட்ட இந்து முன்னணி பொதுச்செயலர் சக்திவேலன் தலைமையில், மாவட்டச்செயலர் முத்துசுந்தரம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், ஒன்றிய துணைத் தலைவர் மணிகண்டன் ஆகியோர் துண்டு பிரசுரம் விநியோகித்தனர்.

இது தொடர்பாக மாவட்டச் செயலர் முத்துசுந்தரம், ஒன்றிய துணைத் தலைவர் மணிகண்டன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்களை மனித உரிமையை மீறி போலீஸார் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றதாக இந்து முன்னணியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இந்து முன்னணி மாநில தலைவர் டாக்டர் அரசு ராஜா செய்தியாளர்களிடம் கூறியது:

ஜனநாயக முறையில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்த இந்துமுன்னணி நிர்வாகிகளை கைதுசெய்து, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக கை விலங்கிட்டு சாத்தான் குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இதை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்த உள்ளோம் என்றார் அவர்.

Tags:

Leave a Reply