பிரதமர் நரேந்திரமோடி, திருப்பதி திருமலையில் இன்று சாமி தரிசனம் செய்ய உள்ளதை முன்னிட்டு, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.

[su_quote]ஆந்திர மாநிலத்திற்கான புதிய தலை நகரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர , இன்று ஆந்திரா வருகிறார்.[/su_quote]

அந்த விழாவில் பங்கேற்ற பின்னர், நாளைமாலை ரேணிகுண்டாவுக்கு வரும் பிரதமர் மோடி, 320 ஏக்கர் பரப்பளவில், 190 கோடி மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையதையும் திறந்துவைக்க உள்ளார்.

பின்னர் திருமலை செல்லும் பிரதமர் , வெங்கடாஜலபதி கோயிலில் சாமிதரிசனம் செய்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு, ஆந்திரமாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.