ஆந்திர மாநிலத்தின் புதிய தலை நகராக உருவாக உள்ள அமராவதிக்கு பிரதமர் நரேந்திரமோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

புதிய ஆந்திர மாநிலத்தின் தலை நகராக, விஜயவாடா- குண்டூர் இடையே கிருஷ்ணா நதிக் கரை ஓரம் சர்வதேசதரத்தில் அமராவதி நகரம் அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று குண்டூர் மாவட்டம், தூளூர் மண்டலத்தில் நடை பெறுகிறது. இதில் சிறப்புவிருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.

அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ள 500 ஏக்கர் பரப்பளவு நிலம் போர்க் கால அடிப்படையில் சுத்தம் செய்யப்பட்டது.

இன்று காலை 9 மணி முதல் கணபதிஹோமம் மற்றும் ஹோம பூஜைகள் நடைபெற உள்ளன. பின்னர் மதியம் 12.36 மணியி லிருந்து 12.43 மணிக்குள் அடிக்கல் நாட்டுவிழா நடைபெறுகிறது. ஆந்திரா உட்பட நாடுமுழுவதிலும் இருந்து புனிதநீர், மண் ஆகியவை சேகரித்து கொண்டுவரப் பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.