விஜய தசமி திருநாளை யொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் டிவிட்டரில் அனுப்பிய வாழ்த்துசெய்தியில்….

நவ ராத்திரி பத்தாவது நாளான இன்று விஜய தசமி கொண்டாடப்படுகிறது. இன்று தொடங்கிடும் நற்காரியங்கள் அனைத்தும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில், மக்கள் அன்னை மகாசக்தியை வணங்கி கல்வி, கலை, தொழில் போன்றவற்றை தொடங்குவர். எனவே, வெற்றித்திருநாளான விஜயதசமி திருநாளை கொண்டாடுவார்கள்.

இத்தகைய சிறப்புமிக்க திருநாளில் அன்னையின் அருளால் மக்கள் அனைவரும் வாழ்வில் வெற்றிபெற்று, மகிழ்வுடன் வாழ்ந்திட மன மார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply