திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார்.ஆந்திர மாநிலத்தின் புதிய தலை நகரம் அமராவதியில் அமைக்கும் பணிகளுக்காக நேற்று நடந்த அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து காரில்புறப்பட்டு மாலை 5 மணிக்கு திருமலைக்கு வந்தார்.

திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சிறிதுநேரம் தங்கி ஓய்வெடுத்தார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு கோவிலுக்கு வந்தார். பிரதான நுழைவுவாயில் வழியாக கோவிலுக்குள் நுழைந்து சாமிதரிசனம் செய்தார். தொடர்ந்து அலங்கரிக்கப் பட்ட தங்ககொடி மரத்தை வலம்வந்து வணங்கினார்.

கோவிலில் உள்ள ரெங்க நாயக்கர் மண்டபத்தில் பிரதமருக்கு லட்டு, தீர்த்தப் பிரசாதம், 2016–ம் ஆண்டுக்கான காலண்டர், டைரி, கல்யாண உற்சவ சாமிபடம் ஆகியவற்றை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர். அத்துடன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். வேதபண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி பிரதமருக்கு ஆசி வழங்கினார்கள்.

நாட்டு மக்கள் அமைதியாகவும், வளமை யோடும், ஒற்றுமையோடும் வாழ வேண்டி பிரார்த்தனை செய்தேன். மக்கள் சுபிட்சமாக வாழவும் ஏழு மலையானிடம் வேண்டி கொண்டேன். விஜய தசமி அன்று சாமி தரிசனம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஒவ்வொரு தனிமனிதருக்கும் ஆன்மிக ஞானம் முக்கியமானது. அவர்கள் சொந்த வாழ்க் கையிலும், தொழில் ரீதியாகவும் வளம்பெற இது உதவும். இறைவனின் ஆசியால் இந்தநாட்டில் உள்ள வறுமை நீங்கும். நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிமனிதரின் முகத்திலும் மகிழ்ச்சியை காணவேண்டும் என்பதற்கே நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம். திருப்பதி பாலாஜியின் ஆசியால் அந்த சாதனையை செய்வோம்.

இதையடுத்து நரேந்திரமோடி கோவிலில் இருந்து புறப்பட்டு பத்மாவதி விருந்தினர் மாளிகை சென்றார். அங்கிருந்து காரில் ரேணிகுண்டா விமானநிலையம் சென்று இரவு 7 மணிக்கு விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.