தேர்தல் பிரச்சாரம் உச்சகட்ட நிலையை எட்டியுள்ள தருணத்தில் பீகாரில் ஒருவீடியோ வெளியாகி பரபரப் பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒருமந்திரவாதியுடன் நிதிஷ் குமார் கட்டி பிடித்து கொண்டு இருக்கிறார்.அப்போது நிதிஷ் குமாரை அந்த மந்திர வாதி முத்தமிடுகிறார். இந்த வீடியோ காட்சியில் உரையாடல்களும் இடம் பெற்றுள்ளன. லல்லு பிரசாத்துடன் கூட்டணி சேர்ந்தது ஏன் என்று கேட்கும் மந்திரவாதி நிதிஷ்குமார் வாழ்க லல்லு ஒழிக என்றும் கோஷம் போடுகிறார்.

தன்னை மதச் சார்பற்றவர் என்று கூறிக்கொள்ளும் முதல்வர் நிதிஷ் குமார் சாமியாரை ரகசியமாக சந்தித்ததன் மூலம் இரட்டைவேடம் போடுகிறார் என்று  பாஜக விமர்சித்துள்ளது.

இது குறித்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், நிதிஷ் குமாரின் மந்திரதந்திரங்கள் பலிக்காது. பீகார் சட்ட மன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மகத்தான வெற்றிபெறும். தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றார். அரசியலில் இருந்து லல்லுபிரசாத்தை ஒழித்து கட்டுவதற்காகவே நிதிஷ்குமார் மந்திரவாதியை சந்தித்துள்ளார் என்று பீகாரை சேர்ந்த மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் தெரிவித்தார்.

Leave a Reply