"இந்தியாவின் அழகே, பல்வேறு மதங்களும், ஜாதிகளும் இருப்பது தான்; ஒற்றுமை என்னும் அந்த தாரக மந்திரத்தை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டும்'

வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் நமது தேசத்தின் பெருமை. ஒற்றுமைதான் நமது ஊடகமாக இருக்க வேண்டும். இவைதான் நமது  வளர்ச்சியின் திறவுகோல். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நமது வளர்ச்சிக்கான முன் நிபந்தனை. நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்து, நாட்டின் முன்னேற்றத்துக்காக கடுமையாக உழைப்போம்.

தீபாவளிக்கு பின்னர் இங்கிலாந்து செல்லும் நான். டாக்டர் அம்பேத்கர், லண்டனில் ஒரு மாணவராக இருந்தபோது, வசித்த பங்களாவுக்கு செல்கிறேன். அது தலித்துகளுக்கும், ஒடுக்கப் பட்டவர்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக அமையும்.

தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இந்த திட்டத்தின்படி உங்களிடம் உள்ள தங்கத்தை வங்கிகளில் டெபாசிட்செய்யுங்கள். அந்த தங்கம், நாட்டின் பொருளாதார சொத்தாகும்.

இந்தியாவில் தங்கம், நமது சமூக வாழ்வின் ஒரு அங்கம் போன்றதாகும். தற்போதைய காலகட்டத்தில் தங்கத்தை பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருப்பது என்பது சரியல்ல.

தீபாவளி பண்டிகையின் போது அசோக சக்கரம் பொறித்த 5 கிராம், 10 கிராம் தங்க நாணயங்களை அரசு வெளியிடுகிறது. சந்தை விலையைவிட இது குறைவான விலையில் வங்கிகள் மூலமும், தபால் அலுவலகங்கள் மூலமும் விற்பனை செய்யப்படும். 20 ஆயிரம் எண்ணிக்கையிலான 5 கிராம் நாணயங்களும், 30 ஆயிரம் எண்ணிக்கையிலான 10 கிராம் தங்க நாணயங்களும் விற்பனைக்கு விடப்படும்.

வீடுகளில், கோவில்களில் பயன்படுத்தப் படாமல் இருக்கிற 20 ஆயிரம் டன் தங்கத்தை திரட்டமுடியும் என்ற நோக்கத்தில் இந்த திட்டங்களை தொடங்குகிறோம்.

இந்தியா, ஆப்பிரிக்கா இடையேயான உறவு வேகமாக வளர்ந்துவருகிறது. குறைந்த பட்சம் 25 ஆயிரம் ஆப்பிரிக்க மாணவர்கள் இங்கே கல்வி பயின்றிருக்கிறார்கள். 27 லட்சம் இந்தியர்கள் ஆப்பிரிக்க கண்டத்தில் வசிக்கிறார்கள்.

இந்திய, ஆப்பிரிக்க நாடுகளின் மக்கள் சிறப்பான எதிர் காலத்துக்காக, உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்தியா எவ்வாறு தூய்மையான நாடாக திகழ முடியும் என்பது தொடர்பாக மும்பையை சேர்ந்த சவிதாபாய், ஒரு ஆடியோ அனுப்பி உள்ளார். தூய்மை இந்தியா திட்டத்துக்கு ஆந்திரா, தெலுங்கானாவின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

நேர்முகத் தேர்வு முறையானது, ஊழலை அதிகரிக்க வகைசெய்கிறது. அந்த முறையால், அதிகாரவர்க்கத்தினரால் ஏழைமக்கள் சுரண்டப்படுகின்றனர். வேலை வாய்ப்புக்காக ஏழை மக்களிடம் இருந்து பணம் திருடப்படுகிறது. சிலநேரங்களில், பணம் கொடுத்த பிறகும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை.

 இது தொடர்பாக நான் சிந்தித்த போது, கீழ்நிலை ஊழியர்கள் மட்டத்தில் நேர்முக தேர்வு நடத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது எனத் தோன்றியது.

 ஒரு சில நிமிடங்கள் மட்டும் ஒருவரிடம் நேரடியாக பேசுவதை கொண்டு அவரது மன நிலையை மனநல நிபுணர் கண்டுபிடித்து விடுவார் என்று நான் இது வரை கேள்விப்பட்ட தில்லை.

 நேர்முக தேர்வை ரத்துசெய்வதால், வேலைகளுக்காக பரிந்துரைகளை தேடிச்செல்லும் ஏழைகளும், பணத்துக்கு வேலை வாங்கி தருவதாக தெரிவிக்கும் தரகர்களின் வலையில் சிக்குவோரும் பெரிதும் பலனடைவர்.

சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த தினம் வரும் 31ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அவருக்கு நாம் மரியாதை செலுத்துவோம்

பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுடன் அகில இந்திய வானொலி வழியாக ‘மனதில் உள்ளதை பேசுகிறேன்’ (மன்கிபாத்) என்ற தலைப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3–ந் தேதி முதல், மாதம் ஒரு முறை பேசி வருகிறார். நேற்று அவர் 13–வது முறையாக பேசியது..

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.