தமிழகம் வளர்ச்சிபெறவும், ஊழலை அறவே ஒழிக்கவும் பாஜக-வை வலுப்படுத்த வேண்டும். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முதன்முதலில் ஆங்கிலேயர்களை எதிர்த்துபோரிட்டு தன் உயிரைத் தியாகம்செய்த வீரன் அழகு முத்துக்கோனை, மத்தியில் 60 ஆண்டுகாலமாக ஆட்சி செய்துவந்த காங்கிரஸ் அரசு தொடர்ந்து புறக்கணத்து வந்தது. ஆனால், பாஜக மட்டுமே உரியமரியாதை அளிக்கிறது. அழகுமுத்துக்கோனை மட்டுமல்லாது இந்திய சுதந்திரத் துக்காக உயிர்தியாகம் செய்த அனைத்து போராளிகளையும், வீரர்களையும், தியாகிகளையும் மதிக்கின்ற கட்சியாகவும், ஆட்சியாகவும் இருப்பது பாஜக மட்டுமே.

காங்கிரஸ் ஆட்சியில் அவரது குடும்பத் தினருக்கு மட்டுமே தபால் தலைகள் வெளியிடப்பட்டன. இந்தசூழலில் காங்கிரஸை வலுப்படுத்த வேண்டும் என ராகுல் காந்தி பேசிவருகிறார். காங்கிரஸை வலுப்படுத்தினால் மீண்டும் குடும்ப ஆதிக்கமே மேலோங்கும். நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள் புறக்கணிக்கப்படுவர்.

தமிழகத்திலும் இதேநிலைதான் உள்ளது. இந்திக்கு முடிவுகட்ட வேண்டும். ஆரியத்துக்கு முடிவு கட்ட வேண்டும். திராவிட இயக்கம் வளரவேண்டும் என்றால் காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும் எனக்கூறி ஆட்சிக்கு வந்தது திமுக. ஆனால், இப்போது குடும்ப கட்சியாக மாறிவிட்டது. கட்சிப்பதவிகளில் தந்தை, மகன், மத்திய அரசு பதவிகளில் மகள், பேரன்கள், தொலைக் காட்சிகளில் ஆதிக்கம், தொழில்களில் ஆதிக்கம் என குடும்ப கட்சியாகவும், ஆட்சியாகவும் மாற்றிவிட்டனர்.

ஆனால், பாஜக-வில் மட்டுமே வாஜ் பாய் தொடங்கி அமித்ஷா வரையிலான அனைத்து தலைவர்களுமே தங்களது குடும்ப உறுப்பினர்களை கட்சி பதவியிலோ, ஆட்சி பதவியிலோ அமர்த்த வில்லை. தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்தாக காங்கிரஸும், திமுக-வும் குற்றம் சுமத்துகின்றனர்.  ஆனால், அலைக்கறை ஊழல்மூலம் உலகளவில் திமுக-வும், காங்கிரஸும் பிரசித்தி பெற்று விட்டது. இரு கட்சிகளிலும் ஊழல் நிறைந்த தலைவர்களே உள்ளனர். தமிழகத்தில் திமுக, அதிமுக ஆட்சிக்குவந்தால் மதுக்கடை விற்பனையை அதிகரிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இளைஞர்கள் நிறைந்த இந்திய தேசத்துக்கு கல்வி, வேலை வாய்ப்பு, வளர்ச்சி, உணவு, பால் இவையே அத்தியாவசிய தேவை. ஆனால், தமிழகத்தில் பாலுக்குபதிலாக இளைஞர்களுக்கு சாராயத்தை வழங்கிக் கொண்டிருக்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். மாட்டுக்கறி சாப்பிடுவதால் சமயச்சார்பற்ற தன்மை ஏற்படும் என்பதல்ல.

பாகிஸ்தானில் அதிகளவில் மாட்டுக்கறி சாப்பிடுகின்றனர். ஆனால், அவர்கள் பிரிவினையை வலியுறுத்து கின்றனர். கடந்த காங்கிரஸ் அரசில் பெருமுதலாளிகள், பெருநிறுவனங்களுக்கு மட்டுமே வங்கிகளில் கடன் வழங்கப்பட்டது. செருப்புதைக்கும் தொழிலாளி தொடங்கி சிறு தொழிலாளிகள் அனைவருக்கும் கடன் வழங்குவதற்காக முத்ராவங்கியை கொண்டுவந்துள்ளோம். இதேபோல, தமிழகம் வளர்ச்சிபெறவும், ஊழலை ஒழிக்கவும் சமுதாய அமைப்புகள் பாஜக-வின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். தமிழத்தில் மாற்றம் வேண்டும் என்பதே அடுத்த 6 மாதங்களுக்கான பிரசாரமாக இருக்கவேண்டும் .

இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் சார்பில், யாதவசமுதாய கோரிக்கைகளை மத்திய அரசிடம் எடுத்துக்கூறும் வகையில் பாளையங் கோட்டையில் செவ்வாய்க் கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாஜக தேசிய பொது செயலரும், தமிழக மேலிடப் பொறுப்பாளருமான பி. முரளிதரராவ் பேசியது:

Leave a Reply