பேஸ்புக்- பிஎஸ்என்எல். நிறுவனங்கள் இணைந்து தென் மற்றும் மேற்கு இந்தியாவில் 100 இடங்களில் வைபை வசதி அமைக்க முடிவுசெய்துள்ளன.

இந்த திட்டத்தின் படி ஒவ்வொரு ஆண்டு ரூ. 5 கோடியை பேஸ்புக் நிறுவனம் பிஎஸ்என்எல்க்கு வழங்கும். மேலும், இணைய சேவைக்காக ஆண்டுக்கு ரூ.5 லட்சத்தை தனியாகவழங்கும். இதுபற்றி பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் எம்டி. அனுபம் ஸ்ரீ வத்சவா கூறுகையில் “இந்ததிட்டத்தின் கீழ் நாங்கள் ஏற்கனவே 25 இடங்களில் வை-பை வசதியை ஏற்படுத்தி யுள்ளோம். பேஸ்புக் நிதிமட்டுமே வழங்குகிறது. வருவாயில் அந்த நிறுவனத்திற்கு பங்கு இல்லை.

மேலும், மத்திய மந்திரிகள் நிதின்கட்காரி, ரவிசங்கர் பிரசாத், நஜ்மா ஹெப்துல்லா, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் 50 நாடளுமன்ற உறுப்பினர்கள் கிராமங்களில் வைபை ஹாட்ஸ் பாட்களை அமைக்க ஆதரவு கொடுத்துள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply