தமிழ்நாட்டில் பருவ மழை தொடங்கியிருக்கிறது. சென்னை மக்கள் பரிதவித்து கொண்டிருக்கிறார்கள். சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. மாநகராட்சி நிர்வாகம் செயலிழந்து விட்டது. டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பலநோய்கள் பரவிவருகின்றன. ஆனால், அது பற்றிய தகவல் மறைக்கப்படுகிறது. டெங்குநோய் பற்றிய தகவல்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இது பற்றி மாநகராட்சி வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும்.

டெங்குநோய் பரவுவதை தடுக்க மாநகராட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. உயிரிழப் புகளை தடுக்க எந்தவகையில் முயற்சி எடுக்கப்பட்டுள்ளன. இதைகண்டிக்கும் வகையில், வரும் 4-ந் தேதி (நாளை) காலை 11 மணிக்கு ரிப்பன் கட்டிடம் முன்பு பாஜக. சார்பில் முற்றுகைபோராட்டம் நடத்தப்படும்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவனும் போராட்டம் நடத்தியிருக்கிறார். பாடகர் கோவனை விடுதலை செய்யவேண்டும் என்று கூறியிருக்கிறார். இவர்கள் கட்சியைசேர்ந்த தலைவரை யாராவது கேவலமாக சித்தரித்து பாடியிருந்தால் இப்படித் தான் விடுதலை செய்யக் கூறுவார்களா?.

தமிழகத்தில் 2 திராவிட கட்சிகளுக்கும் மாற்று பா.ஜ.க. தான். மக்கள் நல கூட்டி யக்கம் தேர்தல் கூட்டணியாக இன்று மாறியிருக்கிறது. அதில் சில எழுத்துகள்தான் மாறியிருக்கிறது என்றாலும், தமிழகத்தின் தலை எழுத்தை அவர்களால் மாற்றமுடியாது. முதலில் இந்தகூட்டணி தேர்தல்வரை தொடருமா? என்பதே சந்தேகம்தான்.

பாஜக.வை எங்கள் கூட்டணியில் சேர்க்கமாட்டோம் என்று வைகோ கூறியிருக்கிறார். நாங்களே அவர்களை விரும்ப வில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் நல்ல திட்டங்கள் தமிழகத்தை வந்தடைய தமிழகத்தில் பாஜக. கூட்டணி வெற்றிபெற வேண்டும்.

தி.மு.க. பொருளாளர் முக.ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். இதை மக்கள் நம்ப தயாராக இல்லை. பாஜக. கூட்டணியைத் தான் மக்கள் நம்புகிறார்கள்.


பாஜக. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை தியாகராய நகரில் உள்ள மாநில தலைமையகமான கமலாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது:-

Leave a Reply