பா.ஜ.,வின் தேர்தல் குழுக்கள், இது வரை செய்துள்ள பணிகள் குறித்து, 5ம் தேதி, கட்சிமேலிடம் ஆய்வு செய்கிறது.

தமிழக சட்ட சபை தேர்தல் பணிகளை மேற்கொள்ள, 38 குழுக்களை, அக்டோபரில் பா.ஜ.க, தலைமை நியமித்தது. தேர்தல்அறிக்கை தயாரிப்பு, பிரசாரம், பொதுபிரச்னைகளுக்கு தீர்வு, ஜாதி, மத தலைவர்கள் சந்திப்பு உள்ளிட்ட பணிகளை, இக் குழுக்கள் மேற்கொள்ள வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.

இந்த குழுவினர், இது வரை செய்துள்ள பணிகள் குறித்து, 5ம் தேதி கட்சிமேலிடம் ஆய்வு செய்கிறது.சென்னையில் உள்ள, தமிழக பா.ஜ.க, தலைமையகமான கமலாலயத்தில் நடக்கும் இக் கூட்டத்தில், கட்சியின் தமிழக பொறுப்பாளரும், தேசிய செயலருமான முரளீதர் ராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட, பலர் பங்கேற்கின்றனர்.

Tags:

Leave a Reply