ஜன் தன் வங்கி கணக்கு திட்டத்தின் பயன்கள்குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார்.

 

ஆதார் அட்டை, ஜன்தன் கணக்கு உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடு குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் ஆய்வுநடத்தினார். ஜன்தன் திட்டம் குறித்து செல்ஃபோனில் குறுந் தகவல் உள்ளிட்ட வழிகளில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பிரதமர் உத்தர விட்டார்.

 

ரயில் நிலை யங்கள் மற்றும் ரயில்களில் சுகாதாரம் மற்றும் தூய்மைகுறித்தும் பிரதமர் ஆலோசனை நடத்தினார். ஆதார் அட்டை வழங்கும்பணிகள் பற்றியும் பிரதமர் ஆய்வுசெய்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply