தங்கம் தொடர்பான 3 புதியதிட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கிவைத்தார்.

தங்கத்தை பணமாக்கும் திட்டம், 2 கிராம் தங்கசேமிப்பு பத்திரம் முதல் 500 கிராம் தங்க சேமிப்பு பத்திரங்களில் முதலீடுசெய்யும் திட்டம் மற்றும் இந்திய தங்க நாணயம் மற்றும் தங்கக்கட்டி திட்டம் ஆகிய  3 புதிய திட்டங்களை பிரதமர்  டெல்லியில் தொடங்கி வைக்கிறார்.

தங்கத்தை பணமாக்கும் திட்டம்,

1999–ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தங்க டெபாசிட் திட்டத்துக்கு மாற்றாக அமல்படுத்தபடுகிறது. இருப்பினும், தங்கடெபாசிட் திட்டம் முதிர்வடையும் வரை, அதில் பழைய வாடிக்கை யாளர்கள் தொடரலாம். ஒரேநேரத்தில் குறைந்தபட்சமாக 30 கிராம் தங்கத்தை முதலீடுசெய்யலாம். அது, கட்டியாகவோ, நாணயமாகவோ, நகையாகவோ இருக்கலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு உச்ச வரம்பு கிடையாது.

தங்க சேமிப்பு பத்திரங்களில் முதலீடுசெய்யும் திட்டம்

2 கிராம் தங்க சேமிப்புபத்திரம் முதல் 500 கிராம் தங்க சேமிப்பு பத்திரங்களில் முதலீடுசெய்யும் திட்டத்தில், பத்திரங்கள், வங்கிகளிலும், சிலகுறிப்பிட்ட அஞ்சலகங்களிலும் கிடைக்கும். இதன் முதிர்வுகாலம் 8 ஆண்டுகள். அதன் பிறகு, எத்தனை கிராம் தங்கபத்திரம் எடுத்துள்ளோமோ, அதை தங்கமாகவோ அல்லது பணமாகவோ திரும்பப்பெற்றுக் கொள்ளலாம். பணமாக பெற்றால் மட்டுமே, அதற்கு வரிவிதிக்கப்படும். தங்கமாக பெற்றால், வரிகிடையாது. முதிர்வுகாலத்தில், தங்கத்தின் விலை எவ்வளவு இருந்தாலும், நாம் முதலீடுசெய்த தங்கம் அப்படியே கிடைக்கும்.

தங்கக்கட்டி திட்டம்

இந்திய தங்கநாணயம் மற்றும் தங்கக் கட்டி திட்டத்தில் உள்நாட்டிலேயே அச்சிடப்பட்ட முதலாவது தேசிய தங்கநாணயம். ஒருபக்கம், அசோக சக்கரமும், அடுத்த பக்கம் மகாத்மா காந்தி உருவமும் பொறிக்கப்பட்டு இருக்கும். முதலில், 5 கிராம் மற்றும் 10 கிராம் எடையுள்ள தங்ககாசுகள் விற்கப்படும். பிறகு, 20 கிராம் தங்க கட்டியும் விற்கப்படும். போலிகாசு தயாரிக்க முடியாத அளவுக்கு, அவற்றில் பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். 24 காரட் தூய்மையுடன் இருக்கும். ஹால் மார்க் முத்திரை பொறிக்கப்பட்டு இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.