ஒரு கோடியே 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பா.ஜ.க. பொறுப்பேற்ற பிறகு, உள்நாட்டு மொத் உற்பத்தி அதிகரித்துள்ளது.


பலகோடி மக்களுக்கு வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன, இந்த கணக்குகளில் இன்றுவரை ருபாய் 26,000 கோடி சேமிக்கப் பட்டுள்ளது.

பொருளாதார சீர்திருத்தங்கள் வெற்றிபெற ஒரு வலிமையான வங்கி அமைப்பு தேவை, ஒரு கோடியே 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பாஜக அரசு கொண்டுவந்துள்ள சீர்திருத்தங்களால் நாட்டில் பலமாற்றங்கள் ஏற்படும்.

பாதுகாப்புத் துறையில் உள் நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க உற்பத்தி நிலையங்கள் முன்வரவேண்டும். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீட்டை 50 சதவீதமாகக் குறைக்கமுடியும்

பாதுகாப்புதுறை சார்ந்த ஆராய்ச்சியில் கவனம் செலுத்துவதுடன், வளர்ச்சியை நோக்கிய மனித ஆற்றலையும் தயார் செய்துவிட்டோமேயானால், இறக்குமதிக்கான செலவைவிட குறைவான விலையில் நாம் உற்பத்திசெய்வது சாத்தியமாகும்.

 இதன் மூலம் சேமிக்கப்படும் நிதியை கல்வித்துறை வளர்ச்சிக்கு நாம் பயன்படுத்தி கொள்ளலாம். இது மிகப்பெரிய லாபம் தானே? எனவே, பாதுகாப்பு துறையில் நாம் தன்னிறைவு பெற்றாகவேண்டும்.

 பன்னெடுங்காலமாக நாம் வெளிநாடுகளின் தொழில் நுட்பங்களையே சார்ந்திருக்கிறோம். ஆனால், தொழில்நுட்பம் சார்ந்த பிரச்னைகள் தொடர்ந்த படியே இருக்கின்றன. எனவே, இனிவரும் காலங்களில் அறிவியல் என்பது உலகளாவிய அளவிலும், தொழில் நுட்பம் என்பது உள்ளூர் சார்புடையதாகவும் இருக்கட்டும். அதுதான் நமது தேவையாகும்.

ஒருவரது குணாதிசயங்களை உருவாக்குவதற்கு அடிப்படை கல்வி அவசியமாகிறது. அதே வேளையில், வானளாவிய லட்சியங்களை அடைய வேண்டுமெனில் உயர்கல்வியிலும் நாம் கவனம்செலுத்த வேண்டும்.

அடிப்படை கல்வியின் மூலம் அறிவுக்கான அடித்தளத்தை பலப்படுத்தி விட்டால், அதன் பிறகு கற்கப்படும் உயர்கல்வியானது நமது தேசத்தை கட்டமைக்க உதவும்


நான் பிரதமர் ஆவதற்கு முன், நாட்டில் தேவைப்படும் சீர்திருத்தங்கள் குறித்து நிபுணர்களிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற்றேன். ஆனால், தூய்மை குறித்த ஆலோசனை எதுவும் வராதநிலையில், அதன் அவசியம்கருதி தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டு வந்தேன். தூய்மையின்மை, அசுத்தமான சுற்றுப் புறங்கள் என்பது ஆரோக்கிய பிரச்னை மட்டுமல்ல, அது ஒட்டு மொத்த தேசநலனுடன் தொடர்புடையது.
 
மண்வளம் குறித்த பரிசோதனை அட்டையை ஒவ்வொரு விவசாயியும் பெறுவதன் மூலம், சரியான பயிரை, சரியான அளவில் சாகுபடிசெய்து, வீண் விரயத்தை தடுக்க  வாய்ப்பு உருவாகும் என்று பிரதமர் மோடி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.