வளர்ச்சிக்கு தடையாக இருந்த சிலஅம்சங்களை களைய, திடமான முடிவுகளை எடுத்தோம்; சிக்கனத்தை மேற்கொண்டோம்; நாட்டுமக்கள் முன்னேற்றத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து புதுமையான பல திட்டங்களை செயல்படுத்தியதால், பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது,''

பதினேழு மாதங்களுக்கு முன், நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது இருந்த மோசமான பொருளாதார நிலை மாறி , நாட்டின் பொருளாதாரம், பலமடங்கு முன்னேறியுள்ளது. 'உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை முற்றிலும் ஒழிப்போம்' என, அறிவித்த படி, 10 ஆயிரத்து, 500 கோடி கறுப்புப்பணத்தை கண்டறிந்து, அவற்றை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடைந் துள்ளது; வெளிநாட்டு முதலீடு அதிகரித்துள்ளது; பணவீக்கம் குறைந்துள்ளது; நடப்புகணக்கு பற்றாக்குறை எனப்படும் ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் உள்ள வித்தியாசம் சீராகியுள்ளது;

இதெல்லாம், விபத்துபோல திடீரென ஏற்பட்டு விடவில்லை. எங்களின் தொடர்கொள்கை திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி.நாட்டுமக்கள் அனைவரும் பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்ட திடமான முடிவுகளுக்கு, வளமானபதில் கிடைத்து வருகிறது. 'செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும், அதற்கான பலனை அளிக்கவேண்டும்; மக்களுக்கு அதனால் பலன்கள் கிடைக்கவேண்டும்' என்பதுதான் எங்களின் 'ஜன் தன், ஆதார் மற்றும் முத்ரா' திட்டங்களின் நோக்கம்.

வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் அம்சங்களை களைய, திடமான சிலமுடிவுகளை எடுத்தோம். குறிப்பாக, நிலக்கரி சுரங்கங்கள், ஸ்பெக்ட்ரம் மற்றும் எப்எம்., ரேடியோக்கள் ஏலம் போன்றவற்றை மேற்கொண்டு, இயற்கைவளங்களை பயன்படுத்தியதுடன், அதிலிருந்து கிடைக்கும் வருவாயையும் அதிகரித்தோம்.

 முந்தைய அரசுகள் செய்யாத வகையில் ரிசர்வ் வங்கியுடன் இணைந்து பணவீக்க கட்டுபாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.இந்த ஆண்டில் வருமானவரி தாக்கலுக்கு முற்றிலும், இணைய வழியை பின்பற்ற செய்தோம்;

இதனால் வரிஏய்ப்பு வெகுவாகக் குறைந்ததுடன், எவ்வித சிக்கலும் இன்றி, 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட வருமானவரி செலுத்துவோர் ஓரிரு நாட்களுக்குள் வருமான வரி கணக்குகளை செலுத்தினர்.

முந்தைய ஆண்டுகளில், இணையம் வாயிலாக கணக்கு தாக்கல்செய்த பிறகு, அவற்றிற்கான நகல்களை சரிபார்க்க, ஆதாரங்களையும், ரசீது களையும் அனுப்பி வைக்க வேண்டியிருந்தது. ஆனால், நாங்கள் அதை தவிர்த்தோம்; இதனால், 90 நாட்களுக்குள் கணக்கு தாக்கல்முடிந்து, கூடுதலாக வரி செலுத்தியவர்களுக்கு பணமும் திருப்பி அளிக்கப்பட்டுவருகிறது.

பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதற்கு முக்கியகாரணம், தேவையில்லாத செலவுகளை அறவே தவிர்த்ததுதான். எங்களின் முயற்சியால், 17 மாதங்களில், 19 கோடி பேருக்கு புதிதாக வங்கிச்சேவை கிடைக்க செய்துள்ளோம். இந்த எண்ணிக்கை உலகின் பலநாடுகளின் மக்கள் தொகையைவிட அதிகம்.'ஜன் தன்' திட்டம் எனப்படும், வங்கிக்கணக்கு இல்லாதோருக்கு வங்கிக்கணக்கு துவக்கும் திட்டத்தில், 26 ஆயிரம் கோடி ரூபாய் சேர்ந்துள்ளது.

டில்லியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பொருளாதார வல்லுனர்கள் பங்கேற்ற, பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது.

Leave a Reply