ஒன் ரேங்க் ஒன்பென்சன் திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல் படுத்த வேண்டுமென, முன்னாள் ராணுவவீரர்கள், 40 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

சில மாதங்களாக இந்தபோராட்டம் தீவிரமானது. டில்லி ஜந்தர்மந்தர் பகுதியில், பலநாட்களுக்கும் மேலாக, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும், தொடர்போராட்டத்தில், ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில்,, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை ஏற்பதாக, மத்திய அரசு அதிகார பூர்வமாக அறிவித்தது. கடுமையான நிதிச்சுமை இருந்தபோதும், முன்னாள் ராணுவ வீரர்களின் நலன்கருதி, இந்த கோரிக்கையை ஏற்பதாக ராணுவ அமைச்சர் மனோகர்பாரிக்கர், அறிவித்தார். கோரிக்கை தாமதமாக நிறைவேற்றப்பட்டதற்கு, முந்தைய ஐ.மு., கூட்டணி அரசின் மந்தமான செயல்பாடுகளே காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

கடந்த 5ம் தேதி தீபாவளிக்கு முன்னர் ஒன் ரேங்க் ஒன்பென்சன் திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதன்படி ஒன் ரேங்க் ஒன்பென்சன் திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 1ம்தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பென்சன் தொகை மாற்றியமைக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் காரணமாக மத்திய அரசுக்கு சுமார் ரூ. 8 ஆயிரம் கோடி முதல் ரூ.10 ஆயிரம் கோடி வரை செலவாகும்.

Leave a Reply