சத்தீஸ்கரைச் சேர்ந்த 105 வயது மூதாட்டிக்கு ஸ்வச்பாரத் எனப்படும் தூய்மை இந்தியா திட்டத்திற்கான விருது வழங்கப்படவுள்ளது.

சத்தீஸ்கரை சேர்ந்த 105 வயது மூதாட்டியான குன்வர் பாய், தனது 10 ஆடுகளை விற்று 2 கழிப்பறைகளை கட்டியுள்ளார். மேலும், கழிவறையின் அவசியம்குறித்தும் அவர் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.

இது பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு கிடைத்தவெற்றியாக பார்க்கப்படுகிறது. இதனையறிந்த பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி மாதம் சத்தீஸ்கருக்கு வந்திருந்த போது, குன்வர்பாயின் காலைத் தொட்டு வணங்கினார்.

இந்தநிலையில், வரும் 17-ம்தேதி டெல்லியில் நடைபெறும் ”ஸ்வச்தா திவாஸ்” விழாவில், குன்வர் பாய்க்கு ( ஸ்வச் பாரத் அப்யான்) தூய்மை இந்தியா விருதுவழங்கி பிரதமர் மோடி கெளரவிக்க உள்ளார்.

Leave a Reply