பாஜக மூத்த தலைவர் அத்வானி எனது ஆசானும், வழிகாட்டியும் ஆவார்' என்று மோடி தெரிவித்தார். பாஜக மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் 88-ஆவது பிறந்த நாளையொட்டி, அரசியல் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் அத்வானியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
 குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அத்வானியின் இல்லத்துக்கு பூங்கொத்து அனுப்பி தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

 மோடி: தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துப் பதிவில், "எங்களுக்கு வழிகாட்டி யாகவும், உத்வேகம் அளிப்பவராகவும் இருக்கும் மதிப்பிற்குரிய அத்வானி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.  அவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ விரும்புகிறேன். அவர் இந்நாட்டுக்கு அளித்த பங்களிப்பு மதிப்பிட முடியாதது. மகத்தான அறிவு மற்றும் நேர்மைகொண்ட ஒரு மனிதராக அத்வானி எப்போதும் மதிக்கப்படுகிறார்.

 தனிப்பட்ட முறையில் அவரிடமிருந்து அதிகமாக கற்றுக் கொண்டேன்.  எங்களைப் போன்றவ ர்களுக்கு ஒரு சிறந்த ஆசிரியராகவும், தன்னலமில்லாத சேவையின் மறு உருவமாகவும் திகழ்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

 அமித் ஷா, ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி ஆகியோரும் அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Tags:

Leave a Reply