லாலு, நிதிஷ் கூட்டணி குறித்து தவறாக கணித்ததால், பா.ஜ.,விற்கு தோல்வி கிடைத்ததாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறினார்.

நடந்து முடிந்த பீஹார் சட்டசபை தேர்தலில் பா.ஜ., 53 தொகுதிகள் பெற்று தோல்வியடைந்தது. லாலு, நிதிஷ் கூட்டணி வெற்றி பெற்று அங்கு நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்க உள்ளார். தேர்தல்தோல்வி குறித்து டில்லியில் பா.ஜ., பார்லிமென்டரி கூட்டம் நடந்தது. இந்தகூட்டத்தில் பாஜக., தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.


இந்த கூட்டத்திற்கு பின் நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில், பீஹார் மக்கள் முடிவை ஏற்றுக் கொள்கிறோம். புதிய அரசு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என நம்புகிறோம். புதிய அரசு வளர்ச்சிக்காக பாடுபடும் என நம்புகிறோம். இந்தகூட்டத்தில் பா.ஜ., தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. பொறுப்பான எதிர்க்கட்சியாக பீஹாரில் பா.ஜ., செயல்படும்.


பீஹார் சட்ட சபை தேர்தலில் சீட் ஒதுக்கீடு குறித்து தவறாக கணித்து விட்டோம். மெகா கூட்டணி தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் பா.ஜ.,விற்கு தோல்விகிடைத்தது. தவறாக கணிக்கப்பட்டதால் ஓட்டுக்கள் அனைத்தும் மெகா கூட்டணிக்கு சென்று விட்டது. லாலு, நிதிஷ் கூட்டணி தனது செல்வாக்கை பலப்படுத்தி கொண்டுள்ளது. மெகாகூட்டணி பற்றி தவறாக கணிக்கப்பட்டதால் எங்களுக்குதோல்வி கிடைத்தது. மெகாகூட்டணியின் சாதகங்களை தவறாக கணித்தோம். அவர்களுக்கு இவ்வளவு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்க வில்லை. சிறப்பு நிதிதிட்டத்தை மத்திய அரசு நிச்சயம் வழங்கும்.


மத்திய அரசு வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். பார்லிமென்டில் மசோதாக்களை காங்கிரஸ் முடக்கக் கூடாது. ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தின் கருத்து தோல்விக்கு காரணமல்ல. அனைத்துகட்சி தலைவர்களும் வரம்பு மீறி பேசக்கூடாது. சமூக சழலின் அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதே பா.ஜ.,வின் நிலை என கூறினார்.

Tags:

Leave a Reply