நேரடி அந்நிய முதலீட்டு விதியில் திருத்தம் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு .அதன்படி மேலும் 15 துறைகளில் 100 சதவீத நேரடி அந்நியமுதலீட்டை ஈர்க்க அனுமதிஅளித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்தியில் பா.ஜ. ஆட்சி  பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேரடி அந்நிய முதலீட்டுதிட்டத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு திடீரென மேற்கொண்டுள்ளது. அதன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி ராணுவம், கட்டுமானம் உள்ளிட்ட 15 துறைகளில் 10 சதவீத நேரடிஅந்நிய முதலீட்டை ஈர்க்க சீர்திருத்த விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விதி திருத்தம்தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது:

 உற்பத்தி, கட்டு மானம், ராணுவம், உள்நாட்டு விமான போக்குவரத்து, சுரங்கம், உள்ளிட்ட 15 துறைகளில் அந்நியநேரடி முதலீட்டில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

 வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் நேரடி அந்நிய முதலீட்டிலும் திருத்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. தற்போது ரூ. 3000 கோடி என்ற அளவில் இருந்து ரூ. 5000 கோடிக்கு மேற்பட்ட முதலீட்டிற்கு அந்நிய முதலீட்டு வாரியத்தின் ஒப்புதல் பெற்றால் போதுமானது .

அந்நிய முதலீட்டு அனுமதி, பங்குதாரர்கள் பொறுப்பு உள்ளிட்ட விதிகளிலும் திருத்தம். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியுள்ளதாவது: 15 துறைகளில் 100 சதவீத நேரடி அன்னிய முதலீட்டை ஈர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது இளைஞர்களுக்கு பெரிதும் உதவும். வளர்ச்சிக்கு அரசு உறுதி பூண்டுள்ளது. யாருக்கும் சந்தேகம் இல்லாத வகையில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும். இன்று செய்யப்பட்டுள்ள சீர்திருத்தம் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு. இதன் மூலம் நடவடிக்கைகளை எளிமைப்படுத்துவதுடன், வரிசைப்படுத்தியும் இருக்கும். பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னேறி செல்லும் பாதையை யாரும் தடுக்க முடியாது. இந்தியாவில் உள்ள வாய்ப்புகள் அனைத்தையும் உலகம் பார்க்க வேண்டும் என அரசு விரும்புகிறது. வளர்ச்சியின் அனைத்து பலன்களும் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் எட்டுவதற்கும், அனைத்து குடிமகன்களுக்கும் கிடைக்க செய்வதற்கும் அரசு உறுதி பூண்டுள்ளது என கூறியுள்ளார்.

Tags:

Leave a Reply