நரேந்திரமோடிக்கு 108 அதிரடிப்படைகள் கொண்ட கருப்புப் பூனை பாதுகாப்பு குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு 108 அதிரடிப்படைகள் கொண்ட கருப்புப் பூனை பாதுகாப்பு கொடுக்க தேசியபாதுகாப்பு படை முடிவுசெய்துள்ளது.

குஜராத் முதல்வரும், பாஜக பிரதம வேட்பாளருமான நரேந்திரமோடி 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு மட்டுமல்லாது வருகின்ற லோக்சபை தேர்தலையும் கருத்தில்கொண்டு நாடு முழுவதும் தீவிரபிரச்சாரம் செய்துவருகிறார். இதுவரை அவர் பல்வேறு கட்சி பொதுக் கூட்டங்களிலும் பேரணிகளிலும் கலந்துகொண்டு பாஜக. வுக்கு ஆதரவுதிரட்டி வருகிறார். அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களில் மக்கள் லட்ச்ச கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள்.

பிகார் மாநில தலைநகர் பாட்னாவில் சென்ற மாதம் நடைபெற்ற பா.ஜ.க. பேரணியில் முதல்வர் நரேந்திரமோடி கலந்து கொண்டு உரையாற்றினார். பாட்னாவில் உள்ள மகாத்மா காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தபேரணியில் லட்ச்க் கண்க்கனோர் கலநதுகொண்டனர். இந்தபேரணியில் மோடி கலந்துகொள்ள வருவதற்கு ஒருசில நிமிடங்களுக்கு முன்பு 6 குண்டுகள் தொடர்ந்துவெடித்தன. இதில் பலர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயத்துடன் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு இன்னும் சிகிச்சைபெற்று வருகின்ற்னர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை இந்தியன் மூஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் நடத்தியுள்ளனர். 2 தீவிர்வாதிகளை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மோடிக்கு தீவிரவாதிகள் குறிவைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையொட்டி மோடிக்கு கருப்புப் பூனை படை பாதுகாப்பு கொடுக்க தேசிய பாதுகாப்புப் படை முடிவுசெய்துள்ளது.

நரேந்திரமோடிக்கு 108 கமோன்டோ வீரர்கள் கொண்ட கருப்புப் பூனை படை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுளளது. தேசியபாதுகாப்பு படையைச் சேர்ந்த இந்த 108 கமோண்டோக்கள் 3 அடுக்காக அரண்போல் நின்று மோடிக்கு பாதுகாப்பு கொடுப்பார்க்ள். மோடி எங்குசென்றாலும் இந்த கமோண்டாக்க்ளும் உடன் செல்வார்கள். மோடி மீது தாக்குதல் நடத்தப்படும்பட்சத்தில் கமோண்டா வீரர்க்ளில் முதல் அடுக்கில் இருப்போர் மோடியை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவார்கள். இதற்காக அவர்களுக்கு சிறப்புபயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2வது சுற்றில் இருக்கும் கமோண்டாக்கள் மோடியை சுற்றிநின்று பாதுகாப்பு வ்ளையமாக இருப்பார்கள். 3வது அடுக்கில் இருப்பவர்கள் எதிரிகளை தாக்கும் பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

Leave a Reply