நரேந்திரமோடி ஆகஸ்ட் 11-ம் தேதி  ஐதராபாத் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்  பா.ஜ.க.,வின் பிரச்சாரக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, நாடுமுழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அந்தவகையில் ஆகஸ்ட் 11-ம் தேதி ஆந்திரபிரதேச மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார் .

அதேநேரத்தில் மோடியின் பிரபலத்தை பணமாக்கி மக்கள்பணிக்கு பயன்படுத்த மாநில பா.ஜ.க முடிவுசெய்துள்ளது. இதற்காக மோடியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நபர்களிடம் தலா 5 ரூபாய் பதிவுக் கட்டணம் வசூலிக்க உள்ளது. இந்ததொகையை உத்தரகாண்ட் வெள்ளநிவாரணப் பணிகளுக்கு வழங்கப்படும் என பா.ஜ.க செய்திதொடர்பாளர் ராமச்சந்திரராவ் தெரிவித்தார்.

இதனால் மோடியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க ஆன்லைனில் ஏராளமானோர் பதிவுசெய்து வருகின்றனர். ஏற்கனவே 40 ஆயிரம்பேர் பதிவு செய்திருப்பதாகவும், குறைந்தது 70 ஆயிரம்பேர் வரை பதிவுசெய்வார்கள் என்றும் ராவ் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்பாக தொழில்நுட்பத்தின் மையமாகவிளங்கும் ஆந்திர தலைநகரில் உள்ள தகவல்தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை அதிகளவில் கூட்டத்திற்கு திரட்டும்நோக்கத்துடன் பா.ஜ.க இத்தகயை முயற்சியில் இறங்கியுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி வரை பதிவுசெய்யலாம்.

Leave a Reply