பாஜக மூத்த தலைவர் அத்வானி வருகிற 11-ந்தேதி சென்னை வருகிறார். அன்று இரவு 7 மணிக்கு அவர் மாமல்லபுரம் செல்கிறார். அங்குநடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு மறுநாள் (12-ந் தேதி) மாலை 4 மணிக்கு சென்னை திரும்புகிறார்.

பின்னர், சென்னையிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டுசெல்கிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்குறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலையபோலீசார், மத்திய தொழிற் படையினர் ஆலோசனை நடத்தினார்கள்.

Leave a Reply