மத்திய அரசுதொடர்பான வழக்குகளை கையாள்வதற்காக உயர் நீதிமன்றங்களில் ஒவ்வொரு ஆட்சியின் போதும் மத்திய அரசு வக்கீல்கள் நியமிக்கப்படுவார்கள்.

பா.ஜ.க அரசு ஆட்சிக்குவந்து 10 மாதம் ஆனபிறகும் இது வரை மத்திய அரசு வக்கீல்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்தது.

சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களில் 111 மத்திய அரசு வக்கீல் பதவிகளுக்கு வக்கீல்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான தேமுதிக., புதிய நீதிக்கட்சி, ஐ.ஜே.கே. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வக்கீல்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இதில் தே.மு.தி.க.வுக்கு-6, ஐ.ஜே.கே, புதிய நீதிக்கட்சிக்கு தலா 2 வீதம் 111 பேரின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது.

சட்ட அமைச்சகம் 111 பேரையும் மத்திய அரசு வக்கீலாக நியமித்துள்ளது.

Tags:

Leave a Reply