பாதுகாப்பான முறையில் மக்கள் மழையை எதிர் கொள்ள தேவையான அனைத்து முயற்சி களையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை கேட்டுக் கொண்டுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழையினால் பலஇடங்களில் தடுக்கப்பட வேண்டிய உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பதாக  தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா மழைவெள்ள பாதிப்புகள் தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள் ஆறுதல் அளிக்கிறது.

 
தமிழகத்தில் கட்டமைப்புகள் சீர் கேடாகி இருப்பதற்கு, முன்பு பல முறை ஆட்சிசெய்த திமுகவும் காரணம். மழைக் கால சிறப்பு மருத்துவ பிரிவுகள் தொடங்க உதவிகள் செய்யுமாறு, தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு கோரிக்கை விடுக்கவேண்டும் என்றும் தமிழிசை கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply