உணவகங்களில் வாடிக்கை யாளர்களிடம் வசூலிக்கப்படும் சர்வீஸ்சார்ஜ் ஆனது தனிப்பட்ட முறையிலேயே பெறப்படுவதாகவும், அதற்கும் அரசிற்கும் எந்தவிததொடர்பும் இல்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அளித்துள்ள விளக்கத்தில், ‘சில உணவ கங்களில் உணவுக்கான கட்டணம் மட்டுமின்றி, சர்வீஸ்சார்ஜ் என்ற பெயரில் ஒருதொகை வசூலிக்க படுகிறது. இது முழுக்கமுழுக்க சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு மட்டுமே சொந்தமாகும்.

இதற்கும் அரசிற்கும் எந்த தொடர்புமில்லை' , குளிர்சாதன வசதிசெய்யப்பட்ட உணவகங்களில் உணவிற்கான தொகையில், 40 சதவீதத்திற்கு மட்டுமே 5.6 சதவீதம் சர்வீஸ்சார்ஜாக வசூலிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கடந்தமாதம் நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, குளிர்சாதன வசதி செய்யப் படாத எந்த உணவகங்களிலும் சர்வீஸ்சார்ஜ் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply