பிஹாரில் பா.ஜ.க.விற்கு தோல்வியா? வெற்றி..நிதீஷ் குமாருக்கா? இது பாஜகவிற்கு தோல்வியானால் இதை மோடிக்கு “சூட்டும் முயற்சி” சரியா?

2010 சட்டமன்ற தேர்தலில் நிதீஷ் பெற்ற ஓட்டு சதவீதம் 26.6%
2015சட்டமன்ற  தேர்தலில் நிதீஷ் பெற்ற வாக்கு 16%சதவீதம்
நிதீஷ் வாக்கு 9.4% குறைந்தது ஏன்? நல்லாட்சி என்பதாலா?

2010 தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு 16%சதவீதம் 2015 தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு 25%சதவீதம் இம்முறை 9% அதிகம் வாக்கு பெற்றால் அது காங்கிரச்  அகராதியில் “தோல்வியா?”

2010 தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்கு 8.6%சதவீதம் 2015 தேர்தலில் காங் பெற்ற வாக்கு 6.6 %சதவீதம்..2% குறைவாக வாக்கு பெற்றால் அதற்குப் பெயர்  “வெற்றியா?”

2010 இல் நிதீஷ்குமார் –பாஜக கூட்டணி பெற்ற இடம் 206 2015 இல் நிதீஷ்குமார்–லாலுபிரசாத் யாதவ்–சோனியாகாந்தி இம்மூவ்ரும் சேர்ந்து பெற்ற இடம் 178 ம்ட்டுமே இது நிதீஷ் குமார் மற்ரும் லாலு பிரசாஅத் கூட்டணிக்கு கிடைத்த வெற்றியா?–தோல்வியா?

2015 தேர்தலில் 1000ம் ஓட்டுக்கு குறைவான வித்தியாசத்தில் பாஜக வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகள்..—25– 2000ம் ஓட்டுக்கு குறைவான வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகள்–15

ஆக பாஜக கூட்டணி இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் இதில் 35 இடங்களையாவது பிடித்திருக்க முடியும்..

உபேந்திர குஷ்வாகா மற்றும் ராம் விலாஸ் பஸ்வான் கட்சிகளுக்கு  ஒதுக்கிய 40 மற்ரும் 45 என 85 இடங்களில் அவர்கள்பெற்ற வெற்றி வெறும் 1…இடம்தான்..

இவர்கள் பெற்ற தொகுதிகளை பார்த்து காங்கிரஸ் தன் வேட்பாளர்களை களமிறக்கியது.. விளைவு  காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது..அவ்ர்களுக்கு இதன்மூலம் கிடைத்த இடங்கள் 27..

இவர்களுக்கு குறைவாக சீட் ஒதுக்கியிருந்தால் பாஜ க அதிக வெற்றி பெற்றிருக்க முடியும்..ஆட்சி அமைத்திருக்க முடியும்

ஆக ”கள்வர்கள்”–”பொய்” ஆட்டம் ஆடி பாஜகவை தோற்கடித்து விட்டனர்..இது நிதிஷ்குமார்–லாலுபிரசாத்–ராகுல்காந்தி கூட்டு ஓட்டுக்கு வெற்றி– அதாவது “அரித்மெட்டுக்கு”- கிடைத்த வெற்றி..

பாஜகவிற்கு கிடைத்த தோல்வி அல்ல..
 

இந்த தேர்தலில் எந்த தர்மமும் கடை பிடிக்கப்பட வில்லை.. நித்ஷ்குமாரும் லாலுபிரசாத்தும் நம்ம ஊர் திமுக அதிமுக போல  பிஹாரில்  எதிர் எதிர் துருவங்கள்..லாலுவின் ஆட்சியை  “காட்டாட்சி:”  என வர்ணித்ததே நித்திஷ்தான். ஆனாலும்  .நிதீஷ்–லாலு கூட்டு சேர்ந்தனர்
 

ஊழலுக்கு எதிராக பேசும் ராகுல்காந்தி மாட்டுத்தீவன ஊழலில் 5 ஆண்டு தண்டிக்கப்படு “பெயில்லில்” வெளியே வந்துள்ள இன்னும் 9  ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட  லாலுவுடன் கூட்டு சேர்ந்த சந்தர்ப்பவாதம் நடந்தது..
 

ஒரு நாட்டின் பிரதமரை ஒரு மாநிலத்துக்குள் நுழைக்ககூடாது அவர் அந்நியன் என் பிரச்சரம் செய்யப்பட்டது..
 

ஆன்னால் முடிவுகல் பிரச்சார்த்தின் எந்த பகுதியையும் எடுத்துக்கொள்ள வில்லை..போனமுறை பெற்ர வாக்குக்களை விட இம்முறை நிதீஷும் காங்கிரசும் குறைவாக ஓட்டு பெற்ரனர்- -லாலு மட்டும் தன் முந்தை வாக்கை தக்க்க வைத்துக்கோனடார்..
 

ஆனாலும் இவ்வளவு அதிசயங்களை நிகழ்த்தியத்தேர்தல் மெலும் சில அதிசயங்களை நிகழ்த்தலா.ம்
 

லாலு 80 இடமும் நிதீஷ் 71 இடங்களையும் பெற்றுள்லதால் லாலு மந்திரி சபையில் தான் விரும்பும் இலாக்களை கேட்களாம்  அதிக மந்திரிகளை கேட்டு தொந்தரவு செய்யலாம்.. இத்னால் மீண்டும் விரிசல் வரலாம்..

பொறுத்திருந்து பார்ப்போம் இவர்கள் கூட்டணி எத்தனை நாளைக்கென்று?

 

நன்றி ; எஸ்.ஆர். சேகர்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.