உலகில் எத்தனையோ நாடுகளில் அந்த நாட்டை நிர்வகிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் உள்ள நாடாளு மன்றம் இருந்தாலும் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் உள்ள நாடாளுமன்றமே

நாடாளுமன்றங்களின் தாய்.என்றழைக்கப்படுகிறது.ஏனெனில் உலகில் உள்ள பெரும் பான்மையான நாடுகள் தங்கள் வசதிக்கேற்ப சின்ன சின்ன மாறுதல்களுடன் இன்றும் இங்கிலாந்தின் நாடாளுமன்ற முறை யையே பின் பற்றி வருகின்றன.இதற்கு வயது 750 ஆகும்.

இங்கு உரையாற்றியதன் மூலம் யுனைடெட் கிங்டம் வரலாற்றில் அதன் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையும் மோடியையே சாரும்.

ஐஸ்லாந்தில் கிபி 930 ம் ஆண்டிலேயே நாடாளுமன்ற நடைமுறைகள் இருந்துள்ளது.அதற்கும் முன்பே துருக்கியில் உள்ள படாராவில் தான் உலகிலேயே முதல் நாடாளுமன்ற கட்டிடம் அமைந்துள்ளது.இதுவும் முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாம்.

1265ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி தான் லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் முதல் நாடாளு மன்ற கூட்டம் கூடியது. 1707இல் கிரேட் பிரிட்டன் உருவான பிறகு இங்கு இரு அவைகள் தோன்றின.நம் நாட்டில் உள்ளது போல அங்கேயும் மேலவை ,கீழவை என்று இரு அவைகள் உள்ளது. மேலவையில் கிறிஸ்துவ பாதிரியார்களும்,அறிஞர்களும் கீழவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் உள்ளனர்.

இந்த நாடாளுமன்றம் இங்கிலாந்திற்கு மட்டும் சொந்தமல்ல. இங்கிலாந்து ஸ்காட்லாந்து,வேல்ஸ்,வடக்கு அயர்லாந்து போன்ற நான்கு நாடுகளும் சேர்ந்த யுனைடெட் கிங்டம் என்ற கிரேட் பிரிட்டனுக்கே சொந்தமாகும்.

உலகில் மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி வந்தாலும் பிரிட்டன் இன்னமும் தங்களின் ராணியை கவுரவித்தே வருகின்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர் ராணியின் ஆலோசனை கேட்டே ஆட்சி செய்வது நடைமுறையில் உள்ளது.

Leave a Reply