பீகார் தேர்தல்தோல்விக்கு பிரதமர் மோடி, தேசியதலைவர் அமித்ஷா மீது மூத்த தலைவர்கள் குறை கூறுவது சரியல்ல என்று பா.ஜனதா தேசிய துணைத்தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து சிவமொக்காவில் நேற்று பா.ஜனதா தேசிய துணைத் தலைவரும், முன்னாள் முதல்–மந்திரியுமான எடியூரப்பா தனியார் கன்னட தொலைக்காட்சிக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க அரசு சிறப்பாக ஆட்சி நடத்திவருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க அமோகவெற்றி பெற்றது. நரேந்திர மோடி மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையால்தான் பா.ஜனதா கட்சி வெற்றிபெற்று, ஆட்சியை பிடித்தது. தற்போது பீகாரில் நடந்த சட்ட சபை தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்திருக்கிறது.

இதற்கு பிரதமர் நரேந்திரமோடியும், தேசிய தலைவர் அமித்ஷாவும் தான் காரணம் என்று பா.ஜ.க மூத்த தலைவர்கள்  கருத்துதெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர். பீகார் சட்ட சபை தேர்தல் தோல்விக்கு பிரதமர் மோடி, தேசியதலைவர் அமித்ஷா மீது மூத்த தலைவர்கள் குறைகூறுவது சரியல்ல. ந

பீகார் தேர்தல் தோல்விக்கு பிரதமர், அமித்ஷாதான் காரணம் என்று குறைகளை சொல்லிபேசுவது சரியானது அல்ல. இது பா.ஜனதா கட்சிக்கும் நல்லது இல்லை. இந்தபிரச்சினையை 4 சுவர்களுக்குள் வைத்து பேசவேண்டும். தங்களது கருத்துக்களை மூத்த தலைவர்கள் வெளியே சொல்வதால், கட்சிக்குள் தேவையில்லாமல் பிளவை ஏற்படுத்தும்.

பீகார் தேர்தல் மூலம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இனிவரும் தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றிகுறித்து விரிவாக ஆலோசிக்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Leave a Reply