டெல்லி சட்டப் பேரவை தேர்தலில் தனி பெரும் பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரமாக செயல்பட்டுவருகிறது. இதற்காக டெல்லியின் 1.2 கோடி வாக்காளர்களின் குடும்ப தலைவர்களுக்கு தனித் தனியாகக் கடிதம் எழுத திட்டமிட்டுள்ளது.

இந்தகடிதத்தில் மத்திய அரசு செய்த சாதனைகளின் பட்டியல், டெல்லியில் செய்யஇருக்கும் முக்கிய பணிகளின் குறிப்புகள் இந்த கடிதத்தில் இடம்பெற்றிருக்கும்.

இந்த கடிதத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி மற்றும் அந்தந்த தொகுதி வேட்பாளர்களின் புகைப் படங்களும் அனுப்பி வைக்கப்படும். கடிதத்தின் இறுதியில் தாமரை சின்னத்தில் வாக்களிக்கும் படி கேட்டு கொள்ளப்பட்டிருக்கும்.

Leave a Reply