பருவநிலை மாற்றத்தை கட்டுப் படுத்துவதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. இந்த பருவ நிலை மாற்றம் தொடர்பாக பொதுவான ஒரே விதி முறைகள் எல்லா நாட்டிற்கும் பொருந்தாது . சுற்றுச் சூழலுக்கு வறுமை பெரும் சவாலாக இருக்கிறது

 சுற்றுச்சூழல் குறித்து சில நேரம் குறைவாக வரையறுக்க ப்படுகிறது. பருவ நிலை மாற்றத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும்போது இந்த நிலை உள்ளது .

பருவநிலைமாற்றத்தை எதிர் கொள்வதற்கு சீரான அணுகுமுறையை நாம் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒருசவால் அந்த நாட்டிலேயே இருக்கும். பருவநிலை மாற்றத்திற்கான பொதுவான விதிமுறையை நாம் அனைத்து நாடுகளும் பயன் படுத்தினால் அது உரிய பலன் அளிக்காது.ஒவ்வொரு நாட்டின் சூழலுக்கு ஏற்ப விதி முறைகளுடன் பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டும்.பருநிலை மாற்றத்திற்கான நடவடிக்கைகளின் பாதை உறுதிமிக்கதாக உள்ளது.

பருவ நிலை மாற்றத்திற்கு முக்கிய நபர்களாக வளர்ந்த நாடுகள் உள்ளன. அவர்கள் இந்தபிரச்சினைக்கு தீர்வுகாண கூடுதலாக பங்களிக்க வேண்டும். பருவநிலை மாற்றத்திற்கு பலமக்கள் மிகக் குறைந்த பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும். ஏழை மக்கள் , பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்கள், மற்றும் இன்னும் ஆதாரவளங்கள் பருவநிலை பேரிடர்களுக்கு இணைந்து செயல்படவேண்டும். சுற்றுச் சூழல் மீதான ஒப்பந்தங்களாலும் சட்ட விதிமுறைகளாலும் நமது தற்போதைய மற்றும் எதிர் கால சந்ததியினர் சுமையை சுமக்கும் நபர்களாக ஆகிறார்கள். சுற்றுச் சூழலுக்கு வறுமை பெரும் சவாலாக உள்ளது.

ஆகையால் நாம் வறுமையை ஒழிக்கவேண்டும். இது நமது அரசின் அடிப்படை இலக்குகளில் ஒன்றாகும். நாங்கள் அந்த இலக்கை எட்டுவதற்கு மிகவும் கடமையுணர்வுடன் செயல் படுகிறோம். இந்தியாவில் உள்ள 1.25கோடி மக்களும் வளம் பெறவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

தலைநகர் டெல்லியில் பருவநிலை நீதி என்கிற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியது

Leave a Reply