மூன்று நிலக்கரிச் சுரங்கங்களை ஏலத்தில்விட்டதன் மூலம், ரூ.12,591 கோடி நிதியை மத்திய அரசு திரட்டியுள்ளது.

நிலக்கரி சுரங்கங்களை ஏலத்தில்விடும் பணி, 2ஆவது கட்டமாக நடக்கிறது. இந்த 2வது கட்ட ஏலத்தில் 3 நிலக்கரிச் சுரங்கங்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டன.

ஜார்க்கண்ட் மாநிலம், தும்ரியில் உள்ள சுரங்கத்தை ரூ.2,127 கோடிக்கு ஹிண்டால்கோ இண்ட ஸ்ட்ரீஸ் நிறுவனமும், சத்தீஸ்கரில் தாரா சுரங்கத்தை ரூ.126 கோடிக்கு ஜிண்டால்பவர் நிறுவனமும், மகாராஷ்டிரத்தில் நீரத் மாலேகான் சுரங்கத்தை ரூ.660 கோடிக்கு இந்திரஜித் பவர் நிறுவனமும் ஏலத்தில் எடுத்துள்ளன.

இந்த 3 நிலக்கரிச் சுரங்கங்களை ஏலத்தில் விட்டதன் மூலம், அரசு கரு வூலத்துக்கு ரூ.12,591 கோடி கிடைத்துள்ளது. இதனுடன் சேர்த்து, நிலக்கரி சுரங்கங்களை ஏலத்தில் விட்டதன் மூலம், மத்திய அரசு இதுவரை ரூ.1.43 லட்சம் திரட்டியிருக்கிறது. இதில், முதல்கட்டமாக 19 நிலக்கரிச் சுரங்கங்களை ஏலத்தில் விட்டதன் மூலம் கிடைத்த ரூ.1 லட்சம் கோடியும் அடங்கும்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 204 ஒதுக்கீடுகளை ரத்துசெய்து உத்தரவிட்டது. அதையடுத்து, அந்த நிலக்கரிச் சுரங்கங்களை மத்திய அரசு ஏலத்தில்விட்டு வருகிறது. இதில், 2ஆவது கட்டமாக 15 சுரங்கங்களை ஏலத்தில்விடும் பணி கடந்த 4ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Leave a Reply