பிரதமர் நரேந்திரமோடி, கடந்த நிதியாண்டில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின் பயனாக, ரூ.1.26 லட்சம்கோடி அளவுக்கு, அன்னிய நேரடிமுதலீடுகள் (எஃப்.டி.ஐ.) கிடைத்துள்ளது என மத்திய அரசு தெரிவித்தது.

இது தொடர்பாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன், மாநிலங்களவையில் புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்ததாவது:

பிரதமர் நரேந்திரமோடி கடந்த 2014-15 ஆம் நிதியாண்டில் 12 நாடுகளுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டார். அதன் பயனாக, ரூ.1.26 லட்சம் கோடிக்கு அன்னிய நேரடி முதலீடுகள் நமக்கு கிடைத்துள்ளன.

இதே கால கட்டத்தில், பல்வேறு இந்திய நிறுவனங்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரேசில், சிங்கப்பூர், இலங்கை, பூடான், நேபாளம் உள்ளிட்ட பல்வேறுநாடுகளில் ரூ.21 ஆயிரம்கோடி அளவுக்கு முதலீடுகள் செய்துள்ளன.

கடந்த நிதியாண்டில், நம்நாட்டுக்கு வந்துள்ள மொத்த அன்னியநேரடி முதலீடு 27 சதவீதம் அதிகரித்து, ரூ.1.97 லட்சம் கோடியாக இருந்தது என்று அமைச்சர் நிர்மலா சீதா ராமன் தெரிவித்தார்.

Leave a Reply