மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்  வ.உ.சி. நினைவு தினத்தை யொட்டி சிம்மக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

வ.உ.சி. கண்ட கனவு களை மோடி அரசு நிறைவேற்றி வருகிறது. உலகத்தில் இந்தியாவை முதன்மையான நாடாக்க உறுதி எடுத்து ள்ளோம். பீகார் மாநில அரசியலை தமிழக அரசியலுடன் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது. அந்த மாநிலத்தில் 1½ கோடி வாக்குகளை பாஜக பெற்றுள்ளது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு அரசியல்கட்சிகள் இணைய உள்ளன. எந்தெந்த கட்சிகள் என்று இப்போது கூறமுடியாது.

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழையால் ஏற்பட்டபாதிப்பை குறித்து தலைமை செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டுவருகிறேன். பருவ மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்புபணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன,

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:

Leave a Reply