பிரதமர் நரேந்திர மோடியின் வௌிநாட்டு சுற்றுப்பயணத்தால், 1.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்து ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி, வௌிநாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்வதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், இந்த சுற்று பயணத்தால், பெருமளவு முதலீடு, வெளிநாடுகளில் இருந்து, இங்குவந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:நரேந்திரமோடி, பிரதமராக பதவியேற்றதும், 'மேக் இன் இந்தியா' எனும், இந்தியாவில் உற்பத்தியை பெருக்குவதற்கான திட்டத்தை அறிவித்தார். அதன்படி, இந்தியாவில் வந்து தொழில்செய்யுமாறு, உலக நாடுகளின் தொழில் நிறுவனங்களுக்கு அழைப்புவிடுக்கும் வகையில், சுற்றுப் பயணம் மேற்கொண்டார். குறிப்பாக,

சீனா, தென் கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து, அங்குள்ள முதலீட்டாளர்களிடம் பேச்சு நடத்தினார்; இதற்கு நல்லபலன் கிடைத்துள்ளது.இந்த நாடுகளின் சார்பில், 2014 – 15 நிதியாண்டில், 1.3 லட்சம் கோடி , இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது; இது, கடந்த நிதியாண்டில் கிடைத்த முதலீட்டைவிட, 37 சதவீதம் அதிகம்.இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply