பிரிக்ஸ்’ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரேசில் நாட்டுக்கு வருகிற 13-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி பயணமாகிறார்.

பிரேசில், இந்தியா, ரஷியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ‘பிரிக்ஸ்’ சார்பாக வருகிற 13-ந் தேதி நடைபெறும் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் பிரேசில் நாட்டுக்கு பயணமாகிறார்.

ஆசிய நாடுகளுக்கு வெளியேநடக்கும் ஒருபெரிய மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்வதால் இது, முக்கிய நாடுகளின் தலைவர்களை அவர் சந்தித்து பேசுவதற்கு ஒரு நல்லவாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது, மேற்கத்திய நாடுகளிடம் இருந்து கடன்பெறுவதை தவிர்க்கும் விதமாகவும், அந்நாடுகளுடன் போட்டிபோடும் வகையிலும், சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் (50 பில்லியன் டாலர்) முதலீட்டுடன் வளர்ச்சிக்கான வங்கிசேவை ஒன்றும் தொடங்கப்படுகிறது. இதில் இடம்பெற்றுள்ள 5 நாடுகளும் முதற்கட்டமாக தலா 60 ஆயிரம்கோடி ரூபாயை தங்களின் பங்களிப்பாக இந்தவங்கிக்கு வழங்கும்.

இந்தியா போன்ற நாடுகளுக்கு தங்களின் லட்சிய திட்டங்களுக்காக அன்னிய முதலீடுகள் அதிகளவில் தேவைப்படுகிறது. இந்தவங்கி தொடங்கப்படுவதன் மூலம் இந்திய கட்டமைப்பு திட்டங்களுக்கு நல்லபலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:

Leave a Reply