தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதா ராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

பின், சென்னையில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அவர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது;  தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளபாதிப்புகளை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க, தமிழக அரசு தவறி விட்டது. 'வெள்ளம் ஏற்படும்' என்ற அறிவிப்பைக்கூட மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் முன் கூட்டியே வெளியிட தமிழக அரசு தவறி விட்டது. மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது.அங்கீகரிக்கபட்ட வீட்டுமனைகளில் கூட கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட வில்லை நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதால்,.வெள்ளம்வடிய வாய்ப்பு இல்லை. சென்னை, வேளச்சேரி அருகே, ஓடை ஒன்றின் மீது அரசே  சாலை அமைத்துள்ளது. இந்தசாலைக்கு நடுவே ஓடை நீர் செல்ல, சிறுபாதை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் மழை நீர் தேங்கி, குடியிருப்புகளுக்குள் சென்று கடும்சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

மழையால் பாதிக்கப்பட்டு, முகாம்களில் ஆயிரக் கணக்கானோர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, மேற்குதாம்பரத்தில் உள்ள பள்ளியில், முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த முகாம், மாநகராட்சியின் குப்பைகிடங்கு அருகே உள்ளது. குப்பை கிடங்கு அருகே, பள்ளி இருப்பதே தவறு; இந்நிலையில், அங்கு முகாமும் அமைத்துள்ளனர்.மழையால் குப்பைநனைந்து, எங்கு பார்த்தாலும் ஈக்கள், கொசுகள் அதிகம் தென்படுகின்றன. இந்நிலை தொடர்ந்தால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மீட்பு பணிகளையும், நோய்தடுப்பு பணிகளையும், தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்.

தமிழக வெள்ளபாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் செயலருடன், தமிழக தலைமைசெயலர் ஞானதேசிகன் பேசியுள்ளார். அப்போது, 'உடனடி நிவாரணம்வேண்டும்' என, தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்க வில்லை. 'நிலைமையை சமாளித்துக் கொள்கிறோம்' என, கூறிவிட்டனர். தேசியபேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் ஒவ்வொரு மாநில அரசுக்கும் உடனடி தேவையை சமாளிக்க, மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. அந்தநிதியை, மாநில அரசுகள் பேரிடர்காலத்தில் உடனடியாக பயன் படுத்தலாம்;

வெள்ளம் பாதித்தபகுதிகளில், தமிழக அரசு சார்பில், 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. பாதிக்கபட்டவர், பாதிக்கப்படாதவர் என, அனைத்து தரப்புக்கும் இத்தொகை வழங்கப்படுகிறது. தமிழக அரசுசார்பில், இத்தொகை எதற்காக வழங்கு கின்றனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.