மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனின் அண்ணன் மறைந்த பி.ராமகிருஷ்ணனின் மகன் ஆர்.பொன்னையா நாகராஜிக்கும், கன்னியா குமரி மாவட்டம் வெளிச்சந்தை, மணவிளை கிருஷ்ண சாமியின் மகள் கேஎஸ்.தர்ஷணாவுக்கும் கடந்த 15-ந் தேதி நாகர்கோவிலில் திருமணம் நடந்தது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராணி மெய் யம்மை ஹாலில் நேற்று மாலை நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.


தி.மு.க. தலைவர் கருணாநிதி மாலை 6.40 மணிக்கு வந்தார். மண மக்கள் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர். பின்னர் மண மக்களுக்கு கருணாநிதி மலர் கொத்துவழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதனை தொடர்ந்து கவிஞர் கனிமொழி, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, மாநில வர்த்தக அணிசெயலாளர் காசி முத்து மாணிக்கம் ஆகியோர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply