அசாம் மாநில பா.ஜ.க தலைவராகவும், மாநில தேர்தல் நிர்வாகக் குழு தலைவராகவும், மத்திய மந்திரி சர்பானந்த சோனாவல் நியமிக்கப் பட்டுள்ளார்.

2014-ம் ஆண்டு 4 மாநில சட்ட சபைத் தேர்தல்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க அதன் பின்னர் டெல்லி, பீகார் மாநிலங்களில் தோல்வி யடைந்துள்ளது. அடுத்த ஆண்டு சட்ட சபைத் தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் அசாம்மாநிலம்  பா.ஜனதா கட்சிக்கு அதிக வெற்றி வாய்ப்புள்ள மாநிலமாக உள்ளது.

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் பா.ஜனதா தலைவராக உள்ள சித்தார்த்தா பட்டாச்சாரியாவின் பதவிக் காலம் அக்டோபர் மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து, புதிய மாநில தலைவ ராகவும் தேர்தல் மேலாண்மைக் குழு தலைவராகவும் மத்திய விளையாட்டு துறை மந்திரியான சர்பானந்த சோனாவல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மத்தியமந்திரி பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கிய ஹிமந்தாபிஸ்வா சர்மா, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரசில் இருந்துவிலகி சமீபத்தில் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். அவருக்கு தேர்தல் மேலாண்மைக் குழுவின் கன்வீனராக செயல்படுவார் என்றும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

Leave a Reply