மோடி இந்தியா திரும்பியபின்னர் தமிழகத்துக்கு மழைநிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக. தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் கூறினார்.


‘உலக மீனவர்தின விழாவை’ முன்னிட்டு தமிழக பாஜக. மீனவர் அணிசார்பில் ‘நமோ (நரேந்திர மோடி) மீன்’ மற்றும் மீன் உணவு திரு விழா சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு, மீனவர் அணி மாநிலதலைவர் எஸ்.சதீஷ் குமார் தலைமை தாங்கினார்.‘நமோ மீன்’ கண்காட்சி மற்றும் மீன் உணவு திரு விழாவை, பா.ஜ.க.  அகில இந்திய பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவ் தொடங்கிவைத்தார்.

விழாவில், நண்டு சூப், வஞ்சிரம் மீன் வறுவல், இறால் பக்கோடா போன்ற மீன்வகை உணவுகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் போது, முரளிதர ராவ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்திய மீனவர்கள் கடலில் சுதந்திரமாக மீன் பிடிக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மீனவர்கள், மீனவமகளிர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூடிய வகையில் திட்டங்கள் நிறைவேற்றபட உள்ளது.

தமிழகத்தில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாஜக. குழு தற்போது பார்வையிட்டு ஆய்வுநடத்தி வருகிறது.

பிரதமர் மோடி வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பியபின்னர் தமிழகத்துக்கு தேவையான மழை நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply