தமிழக வெள்ளநிவாரண உதவிகளுக்கு ரூ.940 கோடி ஒதுக்கீடுசெய்து, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடபட்டுள்ள மத்திய அரசு செய்திக்குறிப்பில், "தமிழக வெள்ள நிவாரண மற்றும் மறு சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.939.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெள்ளபாதிப்புகளை ஆய்வுசெய்ய மத்திய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு கள ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூ.939.63 கோடி தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க வழங்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply